User Info

IP Address
38.107.191.103
United States United States

Who's Online

We have 4 guests online

Impressions total:61095
3. தண்ணீருக்குத் தங்கமா? PDF Print E-mail
Tuesday, 30 December 2008 13:44

கலீஃபா அல் ஹாரூன் அல் ரஷீத் காலத்தில் நடந்த கதை ஒன்று!

பெரியவர் ஒருவர் - சிறிய கிராமம் ஒன்றிலிருந்து - கலீஃபா அவர்களை சந்திக்க - வந்திருந்தாராம். அவருக்கு - கலீஃபாவிடம் கொடுப்பதற்கென்று பெரிதாக ஏதும் கொண்டு வர இயலாததால், அந்த கிராமத்திலிருந்த ஒரு கிணற்றிலிருந்து - மிகவும் சுவையான நீரை ஒரு பானையில் கொண்டு வந்திருந்தாராம்.

அவர் பாக்தாத் வந்து சேர்வதற்குள், நாட்பட்ட அந்தத் தண்ணீர் சிறிது துர்நாற்றம் அடிக்கத் துவங்கி விட்டது. ஆனால், அந்த நீரை அவர் கலீஃபாவிடம் அன்பளிப்பாக அளித்த போது, கலீஃபா அவர்கள் அந்தப் பானை நிறைய தங்கக காசுகளை நிரப்பி அவரிடம் வழங்குமாறு உத்தரவிட்டாராம்.

இந்தப் பேருபகாரத்தைக் குறித்து அவரது சகாக்கள் - கலீஃபாவிடம் வினவிய போது அவர் சொன்னாராம்:

"நான் ஒன்றும் பெரிதாகப் பேருபகாரம் செய்து விடவில்லையே! அவரிடம் இருந்ததை அவர் கொண்டு வந்தார். என்னிடம் இருந்ததை நான் கொடுத்தேன். அவ்வளவு தான்!"

 

சற்றே எண்ணிப் பாருங்கள்.

நமது தொழுகையாக இருக்கட்டும், நோன்பாக இருக்கட்டும், நாம் செய்யும் தான தர்மமாக இருக்கட்டும்,

அப்படி என்ன நாம் அல்லாஹ்வுக்கென்று செய்து விட்டோம்?

ஆனால் அல்லாஹு த ஆலா நமக்குத் திரும்பித் தருவது என்னென்ன?

ஒப்பிட்டுப் பார்ப்போமா?

 
© 2008 - 2009 CounselorMansoor.com
Site Designed and Hosted by MohamedHusain.com