User Info
38.107.191.103
Who's Online
We have 4 guests online




| Impressions total: | 61087 |
| 4. இழப்பு நமக்குத் தான்! |
|
|
|
| Thursday, 29 January 2009 21:04 | |||
|
ஒரே நாளில் வந்த பத்திரிகை தகவல்கள் இரண்டு: தேதி: 19 - 12 - 2008 செய்தி 1 . மனித தவறால் ஏற்பட்ட பஞ்சம் எலும்பை போர்த்திய தோல், வற்றிய முகத்தோடு குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், உணவுக்காக மைல் கணக்கில் நீண்டு நிற்கும் மக்கள் .... இவையெல்லாம் சோமாலியாவில் காணப் படும் காட்சிகள். சோமாலியா ஒரு ஆப்பிரிக்க நாடு. இந்த நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் நிராதரவானவர்கள். அல்லது வறுமையின் கோரப் பிடியில் இருப்பவர்கள். ... மருத்துவ வசதியோ மிக மிக மோசம். நோய் வந்தால் மரணம் தான் ஒரே வழி. டாக்டர்களும் பற்றாக்குறை. மருந்துகளும் பற்றாக்குறை. இதனால் இறப்பை சந்திப்பவர்கள் நிறைய பேர். சோமாலியாவில் ஏற்பட்ட இந்த பெரும் பஞ்சத்தை மனித அவலத்தின் உச்சம் என்று வர்ணிகிறார்கள். இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 200 இறப்பதாக கணக்கெடுத்துள்ளார்கள். சுமார் 45 லட்சம் பெர் பசியின் கொடுமையால் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள். மாடுகளைப் போல் காய்ந்த புற்களையும்,ஆடைகளையும், ஆட்டுத்தோல்களையும் சாப்பிட்டு தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். சோமாலியா குழந்தைகளில் நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் தங்களின் 5- வது பிறந்த நாளைப் பார்த்திராதவர்கள். உலக சரித்திரத்தில் இது வரை காணப் படாத மிக மோசமான மனிதக் கொடுமை என்று சரித்திர ஆய்வாளர்கள் இதை கூறுகிறார்கள். செய்தி 2. பூனைக்கு பொறுத்தப் பட்ட கான்டாக்ட் லென்சு இங்கிலாந்து நாட்டில் விக்ட் தீவில் காட்ஷில் என்ற இடத்தில் உள்ள மிருக வதை தடுப்பு மையத்தில் வளர்ந்து வந்த பூனை ஏர்னஸ்ட். இந்த பூனை கடந்த 13 - ஆண்டுகளாக அங்கு வளர்ந்து வருகிறது. .. இந்தப் பூனைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்களில் நோய் தாக்கியது. அதன் இமைகள் மூடிக் கொண்டன. அது பார்க்கும் திறனை இழந்தது. இதனால் அதற்கு சிகிச்சை அளிக்க மிருக வைத்தியர்கள் தீர்மானித்தனர். அந்த பூனைக்கு வயதாகி விட்டது என்றும், அதனால் ஆபரேஷன் எல்லாம் அதன் உடல் தாங்காது என்றும் பின்னர் முடிவு செய்யப் பட்டது. இதனால் அதற்கு கான்டாக்ட் லென்சு பொறுத்துவது என்று முடிவு செய்து - அதன் படி லென்சு பொறுத்தப் பட்டது. 3 வாரத்துக்கு ஒரு முறை லென்சை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் அணிவிக்கப் படுவதாகவும் அந்த மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிந்தனைகள்: 1. பூனைக்கு மருத்துவம் பார்ப்பதில் தவறே கிடையாது. ஏனெனில் தாகித்த நாய் ஒன்றுக்கு தண்ணீர் தந்து சொர்க்கம் செல்லும் பெண்மணியை நாம் அறிவோம். 2. ஆனால் - சோமாலியாவின் "மனித வளங்களின்" இந்த அவல நிலைக்கு இன்று உலகத்தை, உலக வளங்களை நிர்வகிப்பவர்கள் தவிர வேறு யார் காரணம்? 3. பசியும் வறுமையும் - மனிதனை இறை நிராகரிப்பின் பக்கம் கொண்டு சென்று விடும். ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்: "வறுமை என்பதற்கு மட்டும் "மனித" வடிவம் கொடுக்கப் பட்டிருந்தால் அதனை நான் கொன்றிருப்பேன்!" 4. சோமாலியாவின் மனித வளங்களைக் குறித்து உண்மையில் கவலைப் படுபவர்களுடன் சேர்ந்து நாமும் கவலைப் படுவோம். அவர்களுக்காக குறைந்த பட்சம் துஆ செய்வோம். 5. Think globally, work locally - என்ற பொன்மொழிக்கு ஏற்ப - இங்கே பட்டினியால் வாடுகின்ற ஏழை ஒருவருக்கு ஒரு வேளையாவது உணவளிப்போம்.6. சோமாலியா மட்டும் அல்ல - உலகின் எந்தப் பகுதியாக இருப்பினும் - மனிதர்கள் - அவர்கள் - வாழ்வதற்கு இறைவன் அளித்த வாய்ப்பை மறுத்து - அவர்களை மரணத்தின் பிடியில் தள்ளி விடுவதால் இழப்பு அவர்களுக்கு மட்டும் அல்ல! நமக்கும் தான். நாம் தான் அவர்களின் மனித வளங்களைப் பயன் படுத்திக் கொள்ளத் தவறி விட்டோம்! அவர்களும் நம்மோடு சேர்ந்து வளர்ந்து அவர்கள் உலக மக்களுக்கு ஆற்றியிருக்க வேண்டிய பங்களிப்பை - அவர்களால் அடைய வேண்டிய பலனை - நாம் இழந்து விட்டோம்; உலகம் இழந்து விட்டது என்பது தான் பொருள்.
|



